திருமணத்திற்கு பின்பும் கள்ளக்காதலுக்கு வற்புறுத்திய பெண் - இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்
திருமணத்திற்கு பின்பும் இளைஞரை பெண் கள்ளக்காதலுக்கு வற்புறுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பெளத்தூர் கிராமத்தை சேர்ந்த சேகர்(31). சேகருக்கும் அதே பகுதியை கூலி வேலை சாய்த்து வரும் சேர்ந்த வினோதா(37) என்ற பெண்ணுக்கும் 2017 ம் ஆண்டு முதல் கள்ளதொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதன்பின் 2020 ம் ஆண்டு சேகருக்கு சிந்து என்கிற பெண்ணுடன் திருமணம் ஆகியுள்ளது. திருமணத்திற்கு பின்னரும் வினோதா, சேகரை கள்ளக்காதலை தொடர வலியுறுத்தி வந்துள்ளார். இதனால் சேகருக்கும் அவரது மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
விசாரணை
வினோதாவின் டார்ச்சரை தாங்க முடியாத சேகர், தாலப்பள்ளி கிராம ஏரிக்கரை அருகே கூலி வேலை செய்து வந்த வினோதாவை கத்தியால் வயிறு,கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தி உள்ளார். இதில் குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் இருந்த வினோதாவை அங்கிருந்தவர்கள் மீட்டு ஒசூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலத்த காயமடைந்த வினோதா கிருஷ்ணகிரியில் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்தியால் குத்திய சேகர், காவல் துறையினரிடம் சரணடைந்ததையடுத்து போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.