அட பாவமே..18 ஆண்டுகளாக பக்கத்து வீட்டு மின் கட்டணத்தை செலுத்திய நபர் - ஷாக் பின்னணி!

United States of America California World
By Swetha Sep 23, 2024 08:08 AM GMT
Report

நபர் ஒருவர் 18 ஆண்டுகளாக பக்கத்து வீட்டு மின் கட்டணத்தையும் சேர்த்து செலுத்தியது தெரியவந்துள்ளது.

மின் கட்டணம்

அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள வாகவில் (Vacaville) என்ற நகரத்தை சேர்ந்த ஒரு நபர், 18 ஆண்டுகளாக தனது அண்டை வீட்டாரின் கட்டணத்தை செலுத்தி வந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அட பாவமே..18 ஆண்டுகளாக பக்கத்து வீட்டு மின் கட்டணத்தை செலுத்திய நபர் - ஷாக் பின்னணி! | Man Spends 18 Yrs Paying Neighbours Current Bill

பசிபிக் கேஸ் & எலெக்ட்ரிக் கம்பெனி (Pacific Gas & Electric Company) (PG&E) வாடிக்கையாளர் கென் வில்சன் தனது மின்சாரக் கட்டணம் அதிகரித்து வருவதை கவனித்தார். இதனால் தனது மின் நுகர்வை குறைக்க நடவடிக்கை எடுத்தார்.

அதில் எந்த மாற்றமும் ஏற்படாததால் இது குறித்து விசாரிக்க முடிவெடுத்தார். அதற்காக அவர் மின்சார பயன்பாட்டைக் கண்காணிக்கும் சாதனத்தை வாங்கினார். அப்போது அதன் பிரேக்கர் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் அவரது மீட்டர் தொடர்ந்து இயங்குவதை கண்டறிந்தார்.

மின் கட்டணத்தை தொடர்ந்து.. இந்த கட்டணமும் உயர்வு - விவரம் இதோ!

மின் கட்டணத்தை தொடர்ந்து.. இந்த கட்டணமும் உயர்வு - விவரம் இதோ!

ஷாக் பின்னணி

வில்சன் பின்னர் இந்த பிரச்சனை பற்றி பசிபிக் கேஸ் & எலெக்ட்ரிக் கம்பெனியை தொடர்பு கொண்டு, ஆய்வுக்கு ஒருவரை அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். அந்த விசாரணையில்,

அட பாவமே..18 ஆண்டுகளாக பக்கத்து வீட்டு மின் கட்டணத்தை செலுத்திய நபர் - ஷாக் பின்னணி! | Man Spends 18 Yrs Paying Neighbours Current Bill

வாடிக்கையாளரின் அபார்ட்மெண்ட் மீட்டர் எண்ணிற்கு மற்றொரு அபார்ட்மெண்டிற்கான மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று தெரியவந்தது. அதுவும் 2009-ம் ஆண்டு

முதல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டது மற்றும் ஏற்பட்ட சிரமத்திற்கு வில்சனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.