மூதாட்டி முகத்தில் மனிதக் கழிவை பூசிய நபர் - அதிர்ச்சி சம்பவம்!
90 வயது மூதாட்டி முகத்தில் மனிதக் கழிவை பூசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
90 வயது மூதாட்டி
சேலம், கொத்தபுளியானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பாயி என்கிற நாகம்மாள். இவருக்கு வயது 90. அதேப் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அந்த மூதாட்டிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். தொடர்ந்து,
மூதாட்டியை ஆபாசமாக திட்டுவதையும் வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இந்நிலையில், மூதாட்டி வீட்டில் படுத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற கிருஷ்ணன், மூதாட்டியை திட்டியுள்ளார், அப்போது மூதாட்டியும் கிருஷ்ணனை திரும்ப திட்டியுள்ளார்.
வாக்குவாதம்
இதனால், கோபமடைந்த கிருஷ்ணன், மூதாட்டியை திட்டிக்கொண்டே மனித மலத்தை எடுத்து மூதாட்டி முகத்தில் பூசியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மூதாட்டி சத்தம்போட்டு கத்தியுள்ளார்.
இதையறிந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து நடந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், கிருஷ்ணனை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குபதிவு செய்தனர்.
தொடர்ந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் மருத்துவர் மீதான பாலியல் வன்கொடுமை : முன்னாள் இராணுவ வீரரின் வாக்குமூலத்தால் திடீர் திருப்பம் IBC Tamil
