கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துவது எப்பதான் முடியும்: ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை

judges human waste
By Jon Mar 11, 2021 04:22 AM GMT
Report

பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளில் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவது மனிதத் தன்மையற்ற செயல் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். தொழில்நுட்பம் இன்று கையில் அடங்கிவிட்டது, அதன் வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ளது. விண்வெளியில் புதிய சாதனை படைக்க உள்ள நாடுகளில் முக்கிய நாடாக இந்தியா உள்ளது.

அதே இந்தியாவில் தான் பாதாள சாக்கடை, கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்ய எந்திரங்கள் இல்லாமல் இன்னும் ஈடுபடும் அவலம் தொடர்கிறது.அதில் சிலர் இறந்தும் விடுகின்றனர்.

  கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துவது எப்பதான் முடியும்: ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை | Possible Involve Humans Waste Disposal Judges

தமிழகத்தில் பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுவதைத் தடை செய்யவும், இவ்வாறு சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி இறந்த தொழிலாளர்களுக்குப் போதுமான இழப்பீடு வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.

இது குறித்து கவலை தெரிவித்த நீதிபதிகள்,பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வது மனிதத் தன்மையற்ற செயல் ஆகும். இந்த நடைமுறைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.எனவும் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

பின்னர் வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.வழக்குகள் ஒவ்வெரு முறையும் நீதி மன்றத்திற்கு வருகிறது ஆனால் அதனை நடை முறைபடுத்துவது அரசின் கையில்தான் உள்ளது.