ஒரே ஒரு கொசுக்கடிதான்.. 1 மாதம் கோமாவில் படுத்த நபர் - 30 ஆப்ரேஷன் வேறயாம்.!

Germany
By Sumathi Nov 29, 2022 11:21 AM GMT
Report

ஒரு கொசுக்கடியால் 1 மாதம் கோமாவில் இருந்த நபரை 30 அறுவைச் சிகிச்சைகள் மூலம் உயிரை மீட்டுள்ளனர்.

கொசுக்கடி

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் செபாஸ்டியன் ரோட்ஸ்கே(27). இவரை கொசு ஒன்று கடித்துள்ளது. இதனால் அவர் கோமா நிலைக்கே சென்றுள்ளார். அவரின் ரத்தத்தில் விஷம் கலந்ததால், கல்லீரல், சிறுநீரகம், இதயம், நுரையீரலும் செயலிழந்துள்ளது. மேலும் உடல்நிலை பெரிதும் மோசமாகியுள்ளது.

ஒரே ஒரு கொசுக்கடிதான்.. 1 மாதம் கோமாவில் படுத்த நபர் - 30 ஆப்ரேஷன் வேறயாம்.! | Man Slips Into Coma 30 Surgeries Because Mosquito

தொடர்ந்து, பாக்டீரியாக்கள் அவரது இடது தொடையின் திசுக்களைப் பாதிவரை சாப்பிட்டுவிட்டது. இதனால் அவர் உயிர் பிழைக்கவே வாய்ப்புகள் குறைவு என கூறப்பட்ட நிலையில், தொடையில் தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

30 ஆப்ரேஷன்

மேலும், 30 அறுவைச் சிகிச்சைகள் செய்து மருத்துவர்கள் அந்த நபரின் உயிரை வெற்றிக்கரமாக காப்பாற்றியுள்ளனர். இதுகுறித்து அந்த நபர் கூறுகையில், "நான் வெளியூர் எங்கும் செல்லவில்லை. இங்கேயே தான் இருந்தேன்.

இங்கு எங்கோ தான் அந்த கொசு என்னைக் கடித்துள்ளது. டாக்டர்கள் கொடுத்த தீவிர சிகிச்சையால் நான் உயிர் பிழைத்தேன். ஆசியப் புலி கொசு கடித்ததே இதற்கு முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இப்போது தான் மெல்லக் குணமடைந்து வருகிறேன்" என்றார்.