ஜோதிடத்தை நம்பிய கணவர் - மனைவி ,குழந்தைகளை சுட்டுக் கொலை செய்த கொடூரம்!
ஜோதிடத்தை நம்பி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேச மாநிலம் பேல்பூரை சேர்ந்தவர் ராஜேந்திர குப்தா - நீது தம்பதியினர். இவர்களுக்கு மகன் நவேந்திர குப்தா (25), சுபேந்திர குப்தா (15) மற்றும் மகள் கவுரங்கி (16) உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர குப்தா தனது இளைய சகோதரர் கிருஷ்ணா மற்றும் அவரது மனைவியைக் குடும்ப தகராறு காரணமாகச் சுட்டுக் கொலை செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜேந்திர குப்தா சிறைத் தண்டனை அனுபவித்தார்.
அதன்பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த ராஜேந்திர குப்தா தனது தந்தை லக்ஷ்மி நாராயண மற்றும் அவருடன் வசித்து வந்த இரண்டு காவலர்களைச் சுட்டு கொலை செய்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
சுட்டுக் கொலை
இந்த சுழலில் தப்பி சென்ற ராஜேந்திர குப்தா மனைவி நீது ,மகன் நவேந்திர குப்தா (25), சுபேந்திர குப்தா (15) மற்றும் மகள் கவுரங்கி (16) உள்ளிட்டோரைச் சரமாரியாகச் சுட்டுக் கொலை செய்தார். இதனைகண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர் .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் ராஜேந்திர குப்தா பிடித்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், ஜோதிடத்தை அதிக நாட்டம் உள்ளவராக இருந்துள்ளார்.
மேலும் மனைவி மற்றும் குழந்தைகள் புதிய பணிகளுக்குத் தடையாக இருப்பார் என ஜோதிடர் ஒருவர் ராஜேந்திர குப்தாவிடம் கூறியுள்ளார் .இருப்பினும் காவல்துறை விசாரணையில் முடிவில் தான் கொலைக்கான உண்மையான காரணம் என்ன, என்பது தெரியவரும் என காவல்துறையினர் தெரித்துள்ளனர்.