3வது கணவரின் அந்தரங்க உறுப்பை துண்டித்த மனைவி - போதையால் நேர்ந்த சோகம்
கணவரின் அந்தரங்க உறுப்பை மனைவி துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதையில் வாக்குவாதம்
பீகார் மாநிலத்தை சேர்ந்த விஷ்ணு என்பவர், டெல்லியில் உள்ள விடுதி ஒன்றில் உதவியாளராக பணி புரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் தீபாவளி அன்று விஷ்ணு மது போதையில் வீட்டிற்கு சென்றதால் அவரின் மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு ஏற்பட்டதையடுத்து, அவரது மனைவி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.
அறுக்கப்ட்ட அந்தரங்க உறுப்பு
இதன் பின்னர் விஷ்ணு, உறங்க சென்று விட்டார். விஷ்ணு உறங்கிய பின் வீட்டிற்கு வந்த அவரது மனைவி கத்தியை வைத்து விஷ்ணுவின் அந்தரங்க உறுப்பை துண்டித்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
விஷ்ணுவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், சிகிச்சைக்காக விஷ்ணுவை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விஷ்ணுவின் மனைவியை தேடி வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இது 3வது திருமணமாகும்.
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
36 நாட்களாக கடலில் தத்தளிப்பு! வங்காள விரிகுடாவில் உயிருடன் மீட்கப்பட்ட இரு இலங்கை கடற்றொழிலாளர்கள் IBC Tamil