மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கணவர்.. அடுத்த கணமே அவருக்கு நேர்ந்த துயரம் - அதிர்ச்சி!

Attempted Murder Maharashtra Crime Death
By Vinothini Sep 03, 2023 07:20 AM GMT
Report

தொழிலதிபர் ஒருவர் தனது துப்பாக்கியால் மனைவியை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகராறு

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம் கல்வா பகுதியைச் சேர்ந்தவர் திலீப் சால்வி 56 வயதான இவர் செல்வாக்குமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். தொழிலதிபரான இவர் உள்ளூர் அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு 51 வயதில் பிரமிளா என்ற மனைவி உள்ளார்.

man-shot-his-wife-dead

இவர்களுக்கு இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சால்வி ஆத்திரத்தில் அவரது துப்பாக்கியை எடுத்து தனது மனைவியை சுட்டுக்கொலை செய்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பின்னர் சில நிமிடங்களிலேயே சால்வி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

போலீஸ் விசாரணை

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணையில், இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் சால்வி துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டுக்கொலை செய்துள்ளார். பின்னர் அவரும் மாரடைப்பால் இறந்துள்ளார்.

man-shot-his-wife-dead

மேலும், தனது கணவர் துப்பாக்கியால் மிரட்டும் போது, தனது மகனுக்கு செல்போனில் பிரமிளா தகவல் கொடுத்துள்ளார். அவர் வருவதற்கு முன்பே சம்பவம் நடந்து முடிந்து விட்டது என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.