பேராசையால் ஆன்லைன் சூதாட்டத்தில் 5 கோடி வென்று 58 கோடியை இழந்த தொழிலதிபர் - அதிர்ச்சி சம்பவம்!
ஆன்லைன் சூதாட்டம் மூலம் 58 கோடியை இழந்துள்ளார் தொழிலதிபர் ஒருவர்.
ஆன்லைன் சூதாட்டம்
மகாராஷ்ட்டிர மாநிலம் நாக்பூரில் தொழிலதிபர் ஒருவரை ஆனந்த் என்ற என்ற நவ்ரத்தன் ஜெயின் என்ற இடைத்தரகர் அதிக வருமானம் கிடைக்கும் என்று கூறி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடச் செய்துள்ளார். ஆனால் முதலில் தொழிலதிபர் ஆர்வம் ஏதும் காட்டவில்லை. இருந்தும் அவரை விடாத ஆனந்த் தொழிலதிபரை தொடர்ந்து வலியுறுத்தி அவரின் மனதை மாற்றியுள்ளார்.
பின்னர் தொழிலதிபர் ரூ.8 லட்சத்தை ஹவாலா மூலம் அனுப்பியுள்ளார். அதற்குப் பிறகு வாட்சாப் மூலம் சூதாட்டத்திற்கான லிங்க் ஒன்றை தொழிலதிபருக்கு அனுப்பியுள்ளார். அதனை திறந்து பார்த்த தொழிலதிபருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. தனது வாங்கிக் கணக்கில் ரூ.8 லட்சம் டெப்பாஸிட் ஆகியிருந்தது. இதனால் தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட தொழிலதிபருக்கு சிறு சிறு தொகையாக ரூ.5 கோடி வரை வெற்றி கிடைத்துள்ளது.
பின்னர் சூதாட்டத்தில் ஈடுபட்ட தொழிலதிபருக்கு தோல்வி மட்டுமே கிடைத்து ரூ.58 கோடி நஷ்ட்டத்தை சந்தித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த தொழிலதிபர் ஆனந்திடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் ஆனந்த் பணத்தை கொடுக்க மறுக்கவே தொழிலதிபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் வழக்குப்
பதிவு
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் போலீசார் கோண்டியா என்ற மாவட்டத்தில் இடைத்தரகர் தங்கியிருப்பதை கண்டுபிடித்தனர். ஆனால் அங்கிருந்து ஆனந்த் தப்பிச் சென்றுள்ளார். அங்கு சென்று சோதனை மேற்கொண்ட ரூ. கோடிக்கும் மேற்பட்ட ரொக்க பணம் மற்றும் தங்க பிஸ்கட்டுகளை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.