காதலியுடன் ஷாப்பிங்.. கடையிலேயே கணவரை சரமாரியாக தாக்கிய மனைவியும் மாமியாரும்!

Viral Video Uttar Pradesh Relationship
By Sumathi Oct 14, 2022 06:37 AM GMT
Report

காதலியுடன் கடைக்கு சென்றிருந்த கணவரை, மனைவி சரமாரியாக அடித்துள்ளார்.

காதலியுடன் ஷாப்பிங் 

உத்தரப்பிரதேசம், காஜியாபாத்தை சேர்ந்தவர் மணீஷ்திவாரி. இவரது மனைவிக்கு தெரியாமல் அவரது காதலியை ஷாப்பிங் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். இதற்கிடையில், அவரது மனைவியும் தனது தாயாருடன் ஷாப்பிங் வந்திருந்தார்.

காதலியுடன் ஷாப்பிங்.. கடையிலேயே கணவரை சரமாரியாக தாக்கிய மனைவியும் மாமியாரும்! | Man Shopping With Girlfriend Viral Video

அப்போது, திவாரி தனது காதலியுடன் ஷாப்பிங் செய்து கொண்டிருந்த அதே கடைக்குள் திடீரென அவரின் மனைவியும் உள்ளே வந்துவிட்டார். தொடர்ந்து, தனது கணவர் வேறொரு பெண்ணுடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அடிவாங்கிய கணவன்

மேலும், தனது கணவரின் சட்டை காலரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் அந்த கடைப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனையடுத்து இதனை தடுக்க முயன்ற காதலியையும் தாக்கினர். இதுகுறித்து வெளியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதனையடுத்து, அவரது மனைவி போலீஸில் புகார் அளித்துள்ளார். அந்த விசாரணையில், திவாரியும் அவரின் மனைவியும் சமீபத்தில் சண்டை போட்டுக்கொண்டனர். இதனால் திவாரியின் மனைவி தனது தாயார் வீட்டிற்கு சென்று தங்கி இருக்கிறார்.

அந்த இடைப்பட்ட நேரத்தில் திவாரி வேறு ஒரு பெண்ணுடன் சுற்றுவதை பார்த்து அவரின் மனைவி கோபமாகி அடித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.