குழந்தையின் முன் உல்லாசத்திற்கு அழைத்த கணவர் - மறுத்ததால் ஓடவிட்டு சுட்டுக்கொலை!
கணவன் குழந்தைகளின் முன்னர் உல்லாசமாக இருப்பதற்கு அழைத்துள்ளார், மறுத்ததால் ஓடவிட்டு சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகராறு
உத்தரப்பிரதேச மாநிலம், பரேலி பதே கஞ்ச் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு சந்தை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணபால் லோதி. இவர் கடந்த 2012-ல் பூஜா என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.
இவர் கடந்த மாதம் ஒரு கொலை முயற்சின் வழக்கில் சிறைக்கு சென்றார். பின்னர் ஜாமீனில் வந்த பின்னர் அவரது மனைவி முன்பு போல் பாசம் காட்டவில்லை. அதனால் அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது, அதன்பிறகு அவர் தனது குழந்தைகள் முன்னாள் உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார்.
கொலை
இந்நிலையில், அவரது மனைவி அதற்கு வர மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த கிருஷ்ணா பால் வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கி எடுத்துக்கொண்டு மனைவியை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி வெளியில் ஓடியுள்ளார், அவரை விடாமல் ஓட ஓட துரத்தி சுட்டு கொலை செய்துள்ளார்.
அதனை தடுக்க வந்த அவரது தோழியையும் சரமாரியாக சுட்டுள்ளார். இதனால் அவர் காயமடைந்து சிகிச்சையில் உள்ளார். இது குறித்து போலீசார் அவரது தோழியிடம் புகாரை பெற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.