கள்ளக்காதலனுடன் காருக்குள் மனைவி - பார்த்த கணவனுக்கு நடந்த பகீர் சம்பவம்
மனைவி கள்ளக்காதலனுடன் காருக்குள் இருப்பதை கணவர் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
தகாத உறவு
உத்தரப் பிரதேசத்தில் காரின் முன்பகுதியில் ஒருவர் தொங்கியடி நிற்கிறார். அதனை பார்த்தும் கூட காரை ஓட்டும் நபர் நிறுத்தாமல் வேகமாக செல்கிறார்.
உடனே பிற வாகனத்தில் பயணித்தவர்கள் அந்த காரை நிறுத்துகின்றனர். நடுரோட்டில் கார் நிற்கவே முன்பகுதியில் தொங்கியபடி சென்ற நபர் உடனடியாக கீழே இறங்கி காரை ஓட்டிய நபரிடம் வாக்குவாதம் செய்கிறார்.
அதிர்ச்சி வீடியோ
இதனை சாலையில் செல்வோர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அதன்பின் விசாரித்ததில், அந்த நபரின் பெயர் முகமது சமீர். அவரது மனைவி நூர் அப்ஸா. இவருக்கும் நஸ்ரூல் ஹசன் என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது.
Man Dragged for Kilometres on Car Bonnet after a Minor Dispute in Moradabad UP
— Ghar Ke Kalesh (@gharkekalesh) January 16, 2025
pic.twitter.com/eDdbyu52WW
நூர் அப்ஸா தனது கள்ளக்காதலன் நஸ்ரூல் ஹசன் உடன் காரில் அமர்ந்துள்ளார். அப்போது நஸ்ரூல் ஹசன் திடீரென்று காரில் தப்பிக்க முயன்றுள்ளார்.
இதனால் முகமது சமீர் காரின் முன்பகுதியை பிடித்தபடி அப்படியே நின்றுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அறிந்த போலீஸார் நஸ்ரூல் ஹசனை கைது செய்துள்ளனர்.