நண்பனை நம்பி சென்ற தோழிக்கு புதருக்குள் நடந்த கொடூரம்..!

Sexual harassment Telangana
By Vinothini Jul 05, 2023 07:13 AM GMT
Report

தெலுங்கானாவில் இளைஞர் ஒருவர் தனது நண்பரின் தோழியை கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நண்பர்கள்

தெலுங்கானா மாநிலம், ஹனம் கொண்டா என்ற பகுதியைச் சேர்ந்தவர் அன்வேஷ். இவருடைய நண்பர் அகில், அன்வேஸ் அவரது காதலியுடன் அங்குள்ள ராமப்பா கோவிலுக்கு செல்வதாக கூறியுள்ளார். அப்பொழுது அகிலும் தனது கல்லூரியில் படித்து வரும் தோழியை அழைத்து வருவதாக கூறினார்.

man-sexually-harassed-college-girl

பின்னர் இவர்கள் நான்கு பெரும் காரில் சென்றனர். வழியில் அன்வேஷ் தனது காதலியை வெங்கடாபூர் என்ற இடத்தில் இறக்கி விட்டார். பின்னர் அகில் மற்றும் அவரது தோழி ஆகியோருடன் காரில் சென்றனர்.

கற்பழிப்பு

இந்நிலையில், இவர்கள் மூவரும் காரில் சென்றனர், அதன்பின் கோமாடிப்பள்ளி சோதனை சாவடி அருகே வந்தபோது அகிலின் தோழி காரை நிறுத்தும்படி கூறிவிட்டு அருகில் உள்ள புதர் பகுதிக்கு சிறுநீர் கழிக்க சென்றார்.

அப்பொழுது இவரது அழகில் மயங்கிய அன்வேஷ், இவரது நண்பரை அருகில் தண்ணீர் வாங்கி வருமாறு அனுப்பி வைத்தார்.

man-sexually-harassed-college-girl

அப்பொழுது அன்வேஷ் அந்த பெண்ணிடம் சென்று அவரை வற்புறுத்தி கற்பழித்துள்ளார். பின்னர் அவரது நண்பர் வருவதற்குள் இருவரும் காருக்குள் சென்றுவிட்டனர்.

அப்பொழுது இந்த பெண் அழுதுகொண்டே இருந்துள்ளார். பின்னர் விடுதிக்கு சென்று அவரது பெற்றோரிடம் அனைத்தையும் கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக கே.யு.சி. போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அன்வேஷை கைது செய்தனர்.