60 நாய்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொடூரன் - நீதிமன்றம் விதித்த கடும் தண்டனை?
நாய்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
உலகம் முழுவதும் விதவிதமாக புதுப்புது வகையில் அரங்கேறி வருகின்றன. கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்டவை அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் வினோதமான குற்றங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
அதாவது, 52வயதான விலங்கியல் நிபுணரும், முதலைகள் ஸ்பெஷலிஸ்டுமான ஆடம் பிரிட்டோன் என்பவர் நாய்களை பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் சித்ரவதை செய்து கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
இவர் 60க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களை பாலியல் வன்கொடுமை செய்தது முதல் சித்ரவதை செய்து கொன்றது வரை வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த நிலையில், ஆடம் பிரிட்டன் பதிவிட்ட வீடியோக்களை பார்த்த ஒருவர், போலீசில் புகார் அளித்தார். இவரை கைது செய்த ஆஸ்திரேலிய காவல்துறையினர் நடத்திய விசாரணையின்போது, பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.
கடும் தண்டனை
அதில், விலங்குகளை பராமரிக்க முடியாமல் திணறும் உரிமையாளர்களிடமிருந்து அவற்றை வாங்கி இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். ஆடம் பாரப்பிலியா paraphilia என்ற மன நோயினால் ஆடம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நோய் உள்ளவர்கள் குழந்தைகள் மீதும் , உயிரற்ற பொருட்கள் மீதும் பாலியல் இச்சை கொண்டிருப்பர். ஆனால், ஆடம் ஒரு படி மேலாக விலங்குகள் மீது பாலியல் இச்சை கொண்டுள்ளார். மான்ஸ்டர் என்ற புனைப்பெயரில் அந்த வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.
இது குறித்து அவரை விசாரித்தபோது நீதிமன்றத்தில் தனது குற்றங்கள் அனைத்தையும்ஆடம் ஒப்புக்கொண்டுள்ளார். எனவே அவரை கைது செய்து,நீதிமன்றம் 249 வருடங்கள் சிறைதண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.