ஓலா ஸ்கூட்டர் ஷோரூமுக்கு தீ வைத்த வாடிக்கையாளர் - காரணத்தை பாருங்க!
இளைஞர் ஷோரூமில் பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஷோரூமுக்கு தீ
கர்நாடகா, உம்னாபாத் என்ற பகுதியில் தனியாருக்கு சொந்தமான பைக் ஷோரூம் உள்ளது. இந்நிலையில், திடீரென பைக் ஷோரூமில் இருந்து கரும்புகை வெளிவந்துள்ளது.
உடனே தகவலறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வந்து ஷோரூமில் தீயை போராடி அணைத்தனர். இருப்பினும், இந்த தீவிபத்தால் 6 எலக்ட்ரிக் பைக் மற்றும் ஏராளமான பொருட்கள் முற்றிலுமாக எரிந்து நாசமானது.
இளைஞர் செயல்
இதன் மதிப்பு ரூ.8.5 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், முகமது நதீம்(26) என்பவர் ரூ.1.40 லட்சம் மதிப்பிலான புதிதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கியுள்ளார். 2, 3 நாட்களிலேயே பேட்டரி மற்றும் சவுண்ட் சிஸ்டத்தில் பிரச்னை வந்துள்ளது.
ஸ்கூட்டரில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்வதற்காக, அதே ஷோ ரூமுக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், ஸ்கூட்டரில் உள்ள பிரச்னைகளை சரி செய்வதில் ஷோரூம் ஊழியர்கள் அலட்சியம் காட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால், கடுப்பான நதீம், ஆத்திரத்தில் ஷோ ரூமுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.