நீதிமன்ற வாசலில் தீக்குளிப்பு- நபர் எடுத்த விபரீத முடிவு! என்ன காரணம்?
போராட்டத்தின் போது நீதிமன்றத்திற்கு வெளியே ஒருவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நபர் தீக்குளிப்பு
அமெரிக்கா மாகாணத்தின் நியூயார்க் நகரில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பிற்கு எதிராக நிதி மோசடி வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ட்ரம்பிற்கு ஆதரவாகவும், அவருக்கு எதிராகவும் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக நீதிமன்றத்திற்கு வெளியே பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், அடையாளம் தெரியாத சுமார் 40 வயதுடைய நபர் ஒருவர் திடீரென தீக்குளித்தார்.
என்ன காரணம்?
தொலைக்காட்சி கேமராக்களின் முன்னிலையில் அவர் சில நிமிடங்கள் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததாகச் சம்பவத்தில் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த நபரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை நடத்திய விசாரணையில் அவர் கைகளில் பதாகை மற்றும் துண்டு பிரசுரங்களை வைத்திருந்ததும், அதில் மோசமான தொழிலதிபர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததும் தெரியவந்ததுள்ளது.
அதில் குறிப்பிட்டு யாருடைய பெயரும் இடம்பெறாததால், தீக்குளித்த நபரின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிக்கிடையில் திமன்ற விசாரணையில் ட்ரம்ப் தரப்பின் மேல்முறையீடு ஏற்கப்படவில்லை.