இஸ்ரேல் தாக்குதல்; இனப்படுகொலைக்கு துணைபோகமாட்டேன் - விமானப்படை வீரர் தீக்குளிப்பு!
பாலஸ்தீனர்களை விடுவிக்க கோரி அமெரிக்க விமானப்படை அதிகாரி தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போர் தீவிரம்
மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது.
இதுவரை சுமார் 30,000 பாலஸ்தீனர்கள் உயிரிழந்து உள்ளனர். இதற்கிடையில், ஹமாஸ் குழுவினர் இஸ்ரேலை சேர்ந்த 253 பேரை காசாமுனைக்கு பணய கைதிகளாக கடத்தி சென்றனர்.
மேலும்,100க்கும் மேற்பட்ட பணய கைதிகளை ஒப்பந்தம் அடிப்படையில் ஹமாஸ் விடுவித்தது. இன்னும் 134 கைதிகள் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்ததை அடுத்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
விமானபடை வீரர்
இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு அந்நாட்டின் விமானப்படை வீரர் ஒருவர் திடீரென தீக்குளித்தார். அப்பொது அவர், பாலஸ்தீனரை விடுவிக்கவும். இனப்படுகொலையில் ஒருபோதும் நான் துணைபோகமாட்டேன் என கோஷம் எழுப்பியபடி சரிந்து விழுந்தார்.
அதனை, சமூகவலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்திருக்கிறார். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.