இஸ்ரேலில் குழந்தைகள் கண் எதிரே கொல்லப்பட்ட சகோதரி...நாகினி நடிகை வேதனை!!
தொடர்ந்து நடைபெற்று வரும் இஸ்ரேல் - ஹமாஸ் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை உலகநாடுகளுக்கு அளித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் போர்
இஸ்ரேல் நாட்டில் ஹமாஸ் பயங்கரவாதத்தினருக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கு இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டு வருகின்றது. காசா நகரின் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சுக்குநூறாகிய கட்டிடங்களுக்கு இடையே எவரும் சிக்கியுள்ளனரா என்று பாலஸ்தீனிய ராணுவத்தினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனால் அதிா்ச்சி அடைந்த இஸ்ரேல், போா்ப் பிரகடனம் அறிவித்து நடத்திய பதிலடி தாக்குதலில் காஸா பகுதியில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 1,600-க்கும் மேற்பட்டோா் பலத்த காயம் அடைந்ததாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சா் தெரிவித்தாா். இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
நாகினி நடிகை வேதனை
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு நடுவே ஹிந்தி சின்னத்திரை நடிகை மதுரா நாயக் வெளியிட்ட செய்தியில், அவருடைய சகோதரி மற்றும் அவரது கணவர் இருவரும் அவர்களின் குழந்தைகள் கண் முன்னே கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று வேதனை தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த யூத பெண்ணான மதுரா, நாகினி சீரியலில் நடித்து பிரபலமானவர். இவரின் உறவுக்கார பெண்ணும் அவரது கணவரும் ஹமாஸ் தாக்குதலில் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதாக கதறி அழுது பேசிய வீடியோ தீயாக பரவி வருகிறது.
அந்த இருவரையும் அவர்களது குழந்தைகளின் கண் முன்னே கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.