பெண்களிடம் அத்துமீறியதால் வெளியேற்றம், ஆத்திரத்தில் பாரை கொளுத்திவிட்ட நபர் - 11 பேர் பலி!

Fire Mexico Death
By Vinothini Jul 24, 2023 06:03 AM GMT
Report

 பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட நபரை வெளியேற்றியதால் கோபத்தில் பாருக்கு தீ வைத்ததில் 11 பெரி பலியாகியுள்ளனர்.

அத்துமீறிய நபர்

மெக்சிகோ நாட்டில்ன், சொனோரா என்ற வடக்கு மாகாணத்தில் சான் லூயிஸ் ரியோ கொலராடோ நகரில் பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த வெள்ளி கிழமை இரவு ஆண்கள், பெண்கள் என கும்பலாக கூடி, கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

man-set-fire-on-bar-11-were-killed

அப்பொழுது ஒரு நபர் பாரில் உள்ள பெண்களிடம் தவறாக நடந்துகொண்டார், அதனால் பார் ஊழியர்கள் அவரை வெளியேற்றினர்.

11 பேர் உயிரிழப்பு

இந்நிலையில், ஆத்திரமடைந்த நபர் அங்கு திரும்பி வந்து பினாருக்கு தீ வைத்துள்ளார். இதில் அங்கிருந்த சிலர் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். அதனால் இந்த விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர், அதில் 7 ஆண்கள் மற்றும் 4 பேர் பெண்களும் அடக்கம்.

man-set-fire-on-bar-11-were-killed

இது குறித்து, சோனோராவில் உள்ள அரசு வழக்கறிஞர் அலுவலகம் கூறுகையில், பாரில் "பெண்களை அவமரியாதையாக நடத்தியதற்காக" அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் திரும்பி வந்து மறைமுகமாக மொலோடோவ் காக்டெய்ல் போன்ற எரியும் பொருளை வீசினார்.

இதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மேலும், தாக்குதல் நடத்திவிட்டு தப்பிய நபரை அடையாளம் காணும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.