குளிக்க மறுத்த பெண்.. நபர் செய்த கொடூர காரியம் - 226 ஆண்டுகள் சிறை தண்டனை!
இரட்டை கொலை வழக்கில் நபர் ஒருவருக்கு 226 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொடூர கொலைகள்
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தைச் சேர்ந்தவர் பிரையன் ஸ்டீவன் ஸ்மித் (52). இவரது செல்போனை கடந்த 2019-ம் ஆண்டு பெண் ஒருவர் திருடினார். பின்னர், அதிலிருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்த்து அவர் அதிர்ந்துபோனார்.
அதில், ஸ்டீவன் ஸ்மித் ஒரு பெண்ணை பாலியல் ரீதியில் துன்புறுத்தி சித்ரவதை செய்து கொடூரமாகக் கொலை செய்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இருந்துள்ளது. இதனையடுத்து, செல்போனை திருடிய அந்த பெண், அதனை போலீசாரிடம் ஒப்படைத்து இதுகுறித்து கூறியுள்ளார்.
அதன் பேரில் ஸ்டீவன் ஸ்மித்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, கேத்லீன் ஹென்றி என்ற பெண்ணை கடத்தி ஓட்டல் அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.
நீதிமன்றம் அதிரடி
மேலும், ஏற்கனவே வெரோனிகா அபூச்சுக் என்ற பெண்ணையும் தான் கொலை செய்ததாக கூறி போலீசாரை அதிரவைத்தார். இதுகுறித்து ஸ்டீவன் ஸ்மித் போலீசாரிடம் கூறுகையில், "வீடு இல்லாமல் வீதியில் தங்கியிருந்த அந்த பெண்ணை மது மற்றும் உணவு கொடுப்பதாகக் கூறி எனது வீட்டுக்கு அழைத்து சென்றேன்.
பின்னர், அவரை குளிக்கச் சொன்னபோது அதற்கு மறுத்துவிட்டார். அதனால், ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டேன்" என்று தெரிவித்தார். ஸ்டீவன் ஸ்மித்தின் இந்த பரபரப்பு வாக்குமூலம் அமேரிக்கா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அவர் மீது இரட்டை கொலை, பாலியல் தொல்லை, ஆதரங்களை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது.
இதனிடையே, ஸ்டீவன் ஸ்மித்தை குற்றவாளி என கடந்த பிப்ரவரி மாதம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், இரட்டை கொலை வழக்கில் அவருக்கு 226 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.