வாயோடு வாய் வைத்து பாம்பை காப்பாற்றிய நபர் - வீடியோ வைரல்!

Gujarat Viral Video Snake
By Sumathi Oct 21, 2024 08:30 AM GMT
Report

நபர் ஒருவர் தனது மூச்சுக்காற்றை கொடுத்து நபரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

போராடிய பாம்பு

குஜராத், வதோதராவைச் சேர்ந்தவர் யாஷ் தத்வி. இவர் வனவிலங்கு மீட்பராக உள்ளார். இந்நிலையில், அவர் வசிக்கும் பகுதியில் அசைவற்ற நிலையில் கிடந்த பாம்பு குறித்து தகவலுடன் ஒரு அவசர அழைப்பு வந்துள்ளது.

வாயோடு வாய் வைத்து பாம்பை காப்பாற்றிய நபர் - வீடியோ வைரல்! | Man Saved Snakes Life Giving Breath Gujarath

உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்த யாஷ், மார் ஒரு அடி நீளமுள்ள விஷமற்ற செக்கர்டு கீல்பேக் என்ற ரக பாம்பு ஒன்று அசையாமல் கிடப்பதை கண்டறிந்துள்ளார். பின் பாம்பை பார்த்ததும் அது இறந்திருக்காது மாறாக சுயநினைவின்றி கிடக்கிறது என நம்பியுள்ளார்.

விஷமுள்ள பாம்பு, தேள்களை கண்டால் உடனே இதைதான் செய்ய வேண்டும் - நிபுணர்கள் அறிவுரை!

விஷமுள்ள பாம்பு, தேள்களை கண்டால் உடனே இதைதான் செய்ய வேண்டும் - நிபுணர்கள் அறிவுரை!

வைரல் வீடியோ

அதன்படி, பாம்பின் கழுத்தை கவனமாகப் பிடித்து, அதன் வாயைத் திறந்து தன் வாயால் காற்றை ஊதி சுமார் மூன்று நிமிடங்களுக்கு CPR முதலுதவி சிகிச்சை செய்துள்ளார். மூன்றாவது CPR முயற்சியில் பாம்பு லேசாக அசைய தொடங்கி உயிர் பிழைத்துள்ளது.

இதனையடுத்து பாம்பு மேலதிக பராமரிப்பு மற்றும் மறுவாழ்வுக்காக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த பலரும் யாஷ் தத்விக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.