அடிக்கடி கனவில் பாம்பு வந்தால் என்ன பலன் கிடைக்கும்ன்னு தெரியுமா?
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள். அப்படி பாம்பு நம் கனவில் வந்தால் பலன்கள் ஏராளமாம்.
குறிப்பாக, 'பாம்புகள் கனவில் வந்தால் மிகப்பெரும் கஷ்டம் நம்மைச் சூழும் என்றும், கனவில் பாம்பு வந்து நம்மைக் கடித்தால் நம்மைப் பீடித்து வந்த துன்பம் நம்மை விட்டு விலகும்' என்றும் பொதுவாக ஒரு கருத்து நிலவுகிறது.
நீண்ட நெடுங்காலமாக பாம்பை வழிப்பாட்டுக்கு உரியதாகக் கருதி வழிபட்டு வருகின்றனர். இதையொட்டியே பெண்கள் அம்மன் ஆலயங்களில் நாக வழிபாடு செய்வது, புற்றுக்குப் பால் வார்ப்பது போன்ற வழிபாடுகள் செய்வதை தொன்றுதொட்டே கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள்.
இதனால் பாம்புகள் குறித்த சகுனங்கள், நம்பிக்கைகள் மக்களிடையே இன்றளவும் இருந்து வருகின்றது.
கனவில் வரும் பாம்பு உங்களை கடிப்பதன் மூலம், அல்லது கொத்துவதன் மூலம், அல்லது விழுங்குவதன் மூலம், அல்லது வேறு ஏதேனும் வழியில் உங்களை அழிக்க முற்பட்டால், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தடுத்து, வாழ்க்கையின் நல்ல விடயங்கள் போவதற்கான ஒரு அழைப்பாக அதனை கருதலாம்.
நாம் உறங்கும் பொழுது கனவில் பாம்பு நம்மை கடிப்பது போன்றும், நம்மை துரத்துவது போன்றும், நம்மைச் சுற்றி இருப்பது போன்றும் நாம் கனவு கண்டிருப்போம். மற்ற விலங்குகளைப் பற்றி கனவு காண்பதை போல், பாம்புகளை கனவில் கண்டால் பல்வேறு அர்த்தங்கள் உள்ளது.
பாம்பு கனவில் வந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்று தெரிந்து கொள்வோம்
- பொதுவாகவே, கனவில் பாம்பு வந்தால், நீங்கள் ஒரு கஷ்டமான சூழ்நிலையை கையாண்டு கொண்டிருக்கிறீர்கள் அல்லது உங்களது வாழ்க்கையில் உணர்ச்சி ரீதியாக போராடி வருகிறீர்கள் என அர்த்தமாகும்.
- குட்டி பாம்பை உங்கள் கனவில் நீங்கள் காண்கிறீர்கள் என்றால் அச்சுறுத்தலை நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என அர்த்தமாகும்.
- கனவில் நீங்கள் பாம்பை கொன்றாலோ அல்லது பாம்பு இறந்தாலோ, உங்களை சுற்றியுள்ள ஆபத்து விலகி விட்டது என அர்த்தமாகும்.
- உங்களை சுற்றியுள்ள தீய எண்ணம் கொண்ட இரக்கமற்றவரைக் கூட பாம்பு குறிக்கும். அத்தகைய ஆணையோ பெண்ணையோ நம்ப வேண்டாம் என உங்கள் கனவு கூறுகிறது.
- ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும்.
- இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.
- பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.
- பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.
- பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும்.
- காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள்.
- பாம்பு கடித்து ரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம். கழுத்தில் மாலையாக பாம்பு விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம்.