மனைவியின் வயிற்றை கிழித்து பார்த்த கணவன்; சிசுவின் பாலினம் கண்டறிய வெறிச்செயல்!
சிசுவின் பாலினம் அறிய கணவன் மனைவி வயிற்றை கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி - கணவன்
உத்தரபிரதேச மாநிலம் படவுன் பகுதியை சேர்ந்தவர் பன்னா லால். இவரது மனைவி அனிதா. இந்த இருவருக்கும் 5 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த சூழலில் தான் பன்னா லால் தனக்கு ஆன் குழந்தை வேண்டும் என்று அனிதாவை அடிக்கடி துன்புறுத்தியுள்ளார். இந்த செயலை தட்டிக்கேட்ட அனிதாவின் பெற்றோரிடம்,
உங்களது மகளை விவாகரத்து செய்து வேறு பேனை மணந்து ஆன் குழந்தை பெற்றுக்கொள்வேன் என மிரட்டியுள்ளார். இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு அனிதா எட்டு மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில், வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று மனைவியுடன் சண்டையிட்டுள்ளார்.
சிசுவின் பாலினம்
ஒருகட்டத்தில் சண்டை முடியதில் குழந்தையின் பாலினத்தை தானே தெரிந்துகொள்வதாக கூறி அனிதாவின் வயிற்றில் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த அனிதா வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அனிதா பரேலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக பன்னா லால் மீது அனிதாவின் உறவினர்கள் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்ற நீதிபதி, பன்னா லாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும், ரூ.50,000 அபராதமும் விதித்தார். அபராதத்தை செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.