வேலையை விட்ட நபர்; அலுவலகத்திற்கு வெளியே குத்தாட்டம் - கடுப்பான மேலாளர்!

India Pune
By Jiyath Apr 28, 2024 07:25 AM GMT
Report

வேலையை ராஜினாமா செய்த வாலிபர், அதனை இசை வாத்தியங்கள் முழங்க கொண்டாடிய வினோத சம்பவம் நடந்துள்ளது.  

ஊதிய உயர்வு

புனேவை சேர்ந்த அங்கித் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக கடுமையாக உழைத்தும் அவருக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

வேலையை விட்ட நபர்; அலுவலகத்திற்கு வெளியே குத்தாட்டம் - கடுப்பான மேலாளர்! | Man Quits Job Celebrates With Dhols In Office

மேலும், அந்நிறுவனத்தின் உரிமையாளர் ஊழியரை மதிப்பதும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால் வேலையை விட முடிவு செய்த அங்கித், அதனை உற்சாகமாக கொண்டாடவும் முடிவு செய்தார்.

பிரதமர் மோடி போல் தோற்றமளிக்கும் பானி பூரி வியாபாரி - ஏமாந்து போகும் வாடிக்கையாளர்கள்!

பிரதமர் மோடி போல் தோற்றமளிக்கும் பானி பூரி வியாபாரி - ஏமாந்து போகும் வாடிக்கையாளர்கள்!

ராஜினாமா       

இதற்காக டோல் இசைக்கலைஞர்களை ஏற்பாடு செய்தார். இதனையடுத்து பணியை ராஜினாமா செய்து அலுவலகத்திற்கு வெளிய வந்த அவர், இசை வாத்தியங்கள் முழங்க ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் வேலையை விட்டுச் சென்றார்.

வேலையை விட்ட நபர்; அலுவலகத்திற்கு வெளியே குத்தாட்டம் - கடுப்பான மேலாளர்! | Man Quits Job Celebrates With Dhols In Office

இந்த சம்பவம் அந்நிறுவனத்தின் மேலாளர் முன்னிலையிலேயே நடந்தது. இதனால் ஆத்திரமடைந்த மேலாளர் அங்கிருந்தவர்களை வெளியேறும்படி கோபத்துடன் கூறினார். வேலையில் இருந்து நின்றதை வாலிபர் கொண்டாடும் வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.