100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களுக்கு ஒரு குட் நியூஸ் - அரசு அதிரடி அறிவிப்பு!
100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
100 நாள் வேலை
கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்" கடந்த 2006-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் 100 நாள் வேலை என பொதுமக்களால் அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த திட்டத்தின் ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஊதிய உயர்வு
100 நாள் வேலைக்கான ஊதியத்தை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகம், புதுச்சேரியில் தற்போது ரூ.294 வழங்கப்படும் நிலையில் ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக அரியானா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் ரூ.374 ஆக ஊதியம் உயர்ந்துள்ளது. ஆனால், மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.