மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிய காதலன் - பயங்கர சம்பவம்!
ஓடும் ரயில் முன் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த காதலன் செயலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காதல் விவகாரம்?
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் சதீஷ்(23). அதேப் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியா. கல்லூரி மாணவியான சத்தியாவை சதீஷ் ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
இதையடுத்து சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்தில் சதீஷும் சத்தியாவும் பேசிக்கொண்டிருந்தபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது ரயில்நிலையத்திற்கு வந்த ரயிலின் முன் திடீரென சத்தியாவை,
கொலை
சதீஷ் தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து சத்தியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காவல் ஆய்வாளர் செல்லப்பா தலைமையில் 7 தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.