ரீல்ஸ் மோகம்; ரயில் முன் வீடியோ எடுத்த மாணவன் மீது மோதிய ரயில் - துாக்கி வீசப்பட்ட அதிர்ச்சி வீடியோ
தெலுங்கானாவில் ரயில் வந்து கொண்டிருந்த ரயில் பாதையில் இன்ஸ்டாகிராம் வீடியோ எடுக்க முயன்ற வாலிபர் ரயில் மோதி படுகாயமடைந்தார்.
துாக்கி வீசப்பட்ட மாணவன்
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் அக்ஷய் குமார் 11 ஆம் வகுப்பு படித்து வரும் இவர்.
இன்ஸ்டாகிராம் மோகத்தில் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக ரயில் வந்த போது முன் நடந்து சென்றார்.அப்போது ரயிலின் என்ஜின் மோதியதில் மாணவன் அக்ஷய் துாக்கி விசப்பட்டு கீழே விழுந்தார்.
ரயில் மோதியதில் பலத்த காயம் அடைந்த கிழே கிடப்பதை கண்ட ரயில்வே ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்ஸ்டாகிராம் மோகத்தால் மாணவன் ரயில் அடிப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#Why pic.twitter.com/xFuG0UN2h4
— Vishal Dharm (@VishalDharm1) September 4, 2022