கொடுத்த கடனை திரும்ப கேட்க போன ஊழியர்கள் - கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய கொடூரம்!
நிதி நிறுவன ஊழியர்கள் மீது வாடிக்கையாளர் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
தனிநபர் கடன்
ராஜஸ்தான், ஜுன்ஜுனு என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரா சுவாமி. இவர் தனியார் நிதி நிறுவனத்தில் தனிநபர் கடன் வாங்கியுள்ளார். மாதம் தோறும் EMI முறையாக கட்டவில்லை. அதனை வசூல் செய்வதற்காக நிதி நிறுவனத்தில் பணிபுரியும் நவீன், குல்தீப் என்ற இருவர் சுரேந்திரா சுவாமியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது அவர் வீட்டில் இல்லை. எனவே, அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். அதில், அருகே உள்ள கடை பக்கத்தில் நிற்பதாக கூறியுள்ளார். அவர்களும் அந்த இடத்திற்கு சென்று அவரைப் பார்த்துள்ளனர்.
தாக்குதல்
அப்போது அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால், சுரேந்திரா, அருகே இருந்த கடையில் கொதிக்கும் எண்ணெய்யை ஜக்கில் எடுத்து வந்து இரு ஊழியர்கள் மீதும் ஊற்றியுள்ளார். உடனே இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக உள்ள சுரேந்திராவை தேடி வருகின்றனர்.