மறுமணம் தேவையா.. 21 வயது பெண் ஆடையை கிழித்து தாக்கிய உறவினர்கள்!

Gujarat Marriage Crime
By Sumathi Dec 16, 2022 11:01 AM GMT
Report

மறுமணம் செய்ய முயன்ற இளம்பெண்ணை உறவினர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறுமணம்? 

குஜராத், அம்ரேலியைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவருக்கு திருமணமான நிலையில் கணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். அதனையடுத்து அப்பெண் மற்றொரு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதற்கு கணவர் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


ஆனால் அதனை கண்டுக்கொள்ளாத பெண் திருமண வேலைகளை பார்த்துள்ளார். இதனால் இளம்பெண்ணை மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் சரமாரியாக தாக்கியுள்ளனர். வீட்டின் தூணில் இளம்பெண்ணை முதல் கணவனின் சகோதரிகள் இறுக்கி பிடித்துக்கொண்டு ஆடைகளை கிழித்து அடித்துள்ளனர்.

கொடூர தாக்குதல்

மேலும் தலை முடியை கத்தரிக்கோல் கொண்டு வெட்டியுள்ளனர். இந்த வன்முறையை கிராம மக்கள் முதல் கணவனின் குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவித்து கண்டும் காணாமல் இருந்துள்ளனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்துள்ளனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்திற்கு மகளிர் அமைப்புகள் கண்டம் தெரிவித்துள்ளன.