காவலராக இருந்து கொண்டே நீட் தேர்வில் வெற்றி - சாதித்து காட்டிய இளைஞர்!

Tamil nadu Tamil Nadu Police Dharmapuri
By Vinothini Jul 29, 2023 05:34 AM GMT
Report

போலீஸ் பணியில் இருந்துகொண்டே இளைஞர் ஒருவர் நீட் தேர்வில் படித்து வெற்றிபெற்றுள்ளார்.

இளைஞர்

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் முதுகம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ். இவர் கடந்த 2016-ம் ஆண்டு பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்தார். இவர் மணருதுவ கால்லூரியில் சேர விரும்பினார், ஆனால் இவரால் சேர முடியவில்லை.

man-passed-neet-exam-while-working-as-police

அதனால் இவர் பி.எஸ்சி வேதியியல் படிப்பை முடித்தார். அதன்பிறகு 2020-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் 2-ம் நிலைக் காவலராக தேர்வானார். தற்பொழுது இவர் ஆவடியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

நீட்டில் வெற்றி

இந்நிலையில், இவர் மருத்துவ படிப்பை தொடர்வேண்டும் என்று நினைத்தார். இவரது சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர் ஊக்கமளித்தனர். இவர் கடந்த ஆண்டில் நீட் தேர்வில் 268 மதிப்பெண் பெற்றார், இதனை தொடர்ந்து, இந்த ஆண்டும் இவர் நீட் தேர்வு எழுதினார்.

man-passed-neet-exam-while-working-as-police

இதில் 400 மதிப்பெண்கள் எடுத்தார், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றார். மேலும், இவருக்கு கலந்தாய்வில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்தது.

காவல்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி தற்போது பார்த்து வரும் பணியில் இருந்து விலகி பின்னர் மருத்துவக் கல்லூரியில் சேர இருப்பதாக கூறினார். இவருக்கு கிராம மக்கள் அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.