சென்னையில் தீபாவளி பண்டிகை - பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார் குவிப்பு...!
சென்னையில் வரும் தீபாவளி பண்டிகையையொட்டி அசம்பாவிதச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை
நாடு முழுவதும் வரும் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இதனையடுத்து, கடைகளில் பட்டாசு விற்பனையும், புத்தாடை விற்பனையும் சூடு பிடித்துள்ளது. துணி கடைகளில் மக்கள் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுபாப்பு பணியில் போலீசார் குவிப்பு
இந்நிலையில், சென்னையில் வரும் தீபாவளி பண்டிகையையொட்டி அசம்பாவிதச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனையடுதது, 18,000 போலீசார் வரும் தீபாவளி அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் டிரோன்கள் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.