ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி - கடைசியில் கணவன் செய்த வெறிச்செயல்!

Attempted Murder Karnataka Crime
By Sumathi Oct 07, 2025 06:51 AM GMT
Report

மனைவியை கோடரியால், கணவன் வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம்  

கர்நாடகா, டோனிகரா பகுதியைச் சேர்ந்தவர் மாரம்மா(35). இவரது கணவர் சங்கப்பா(40). இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக தனது தாய் வீட்டில் மாரம்மா வசித்து வந்தார்.

மாரம்மா - சங்கப்பா

இந்நிலையில் மனைவியை பார்க்க சங்கப்பா சுராபுராவிற்கு வந்துள்ளார். பின் அவரை ஆசைக்கு இணங்க கூறியுள்ளார். இதற்கு மனைவி மறுப்பு தெரிவித்ததால், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மனைவியின் கள்ளக்காதலுக்காக உயிரைவிட்ட ராணுவ வீரர் - 6 மாதத்தில் விபரீதம்!

மனைவியின் கள்ளக்காதலுக்காக உயிரைவிட்ட ராணுவ வீரர் - 6 மாதத்தில் விபரீதம்!

கணவன் வெறிச்செயல்

அதில் ஆத்திரமடைந்த சங்கப்பா வீட்டில் இருந்த கோடரியால் மாரம்மாவை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி - கடைசியில் கணவன் செய்த வெறிச்செயல்! | Man Murdered Wife For Refuse Intimate Karnataka

பின் காவல்நிலையத்தில் சென்று சரணடைந்துள்ளார். இதனையடுத்து போலீஸார் உடலை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.