கர்ப்பிணி பசுவை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொடூரம் - இளைஞர் கைது!
கர்ப்பிணி பசுவை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பசுவுக்கு பாலியல் வன்கொடுமை
மேற்கு வங்கம், தெற்கு பர்கானாஸ் மாவட்டம் வடக்கு சந்தன்பிடி பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி புய்யா. இவர் தனது தொழுவத்தில் பசு, ஆடு, கோழி என வளர்த்து வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் நள்ளிரவில்,
ஆர்த்தியின் மாட்டுத்தொழுவத்திற்குள் நுழைந்த நபர், அங்கிருந்த கர்ப்பிணிப் பசுவை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அதிக ரத்தப்பொக்கு ஏற்பட்டு பசு இறந்துள்ளது. காலையில், பசுவின் நிலைமையைக் கண்டு ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இளைஞர் கைது
பசுவின் பிறப்புறுப்பில் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு பக்கத்து வீட்டு பிரத்யுத் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது, ஏனெனில் ஏற்கனவே பிரத்யுத் கால்நடைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் பழக்கமுடையவர் என்பதால் அவர்தான் தங்கள் பசுவையும் கொடுமை செய்திருக்கக்கூடும் என சந்தேகித்தனர்.
இதையடுத்து அவர் மீது உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து பிரத்யுத் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 வின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் கைது செய்தனர்.
இவர் மீது ஏற்கனவே ஆடு, நாய் போன்ற கால்நடைகளுடன் உடலுறவு கொண்டது, மற்றும் திருடு, வழிப்பறி போன்ற பல்வேறு குற்ற வழக்குகள் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.