இறந்த கணவன்; மாமனாரை திருமணம் செய்த மருமகள்? பரவும் வீடியோ!
பெண் ஒருவர் தனது மாமனாரை திருமணம் செய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
மாமனாருடன் திருமணம்
நம் நாட்டில் பல தார திருமணங்களும் வினோதமாக நடைபெறுகிறது. அதன் வரிசையில், சமீபத்தில் ஒரு பரபரப்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அதில் ஒரு பெண் தனது மாமனாரை திருமணம் செய்து கொள்வது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.

கணவரை இழந்த காரணத்தால் கணவரின் தந்தையையே அப்பெண் திருமணம் செய்வதாக காட்டப்பட்டிருந்தது. அதில், இளம்பெண் ஒருவர் சிவப்பு நிற உடையுடன் மணப்பெண் கோலத்தில் கோயிலில் இருந்து மலையும் கழுத்துமாக வெளியே வருகிறார்.
வைரல் வீடியோ
அவருடன் வயதான தோற்றம் கொண்ட நபர் ஒருவரும் மாலையுடன் ஜோடியாக வெளியே வருகிறார். விருப்பத்துடன் தான் திருமணம் நடைபெறுகிறதா என்று பெண்ணிடம் கேள்வி எழுப்பப்படும் நிலையில், ஆம் விரும்பித்தான் திருமணம் செய்கிறேன் என அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
बेटा मर गया तो ससुर ने बहू से शादी कर ली !
— Kainat Ansari (@Itz_Kainat__) April 29, 2023
टनाटनी लोग हमेशा सुर्खियों में रहते हैं !!??? pic.twitter.com/2iscykiB4u
தொடர்ந்து, ஏன் முதியவரை மணக்கிறீர்கள் என்று கேள்விக்கு, இவரை விட வேறு யாரும் தன்னை நன்றாக பார்த்துக்கொள்வதில்லை என்கிறார்.
ஆனால், அதன்பின் தான் விசாரணையில், இது சித்தரிக்கப்பட்ட வீடியோ உண்மை சம்பவம் அல்ல என தெரியவந்துள்ளது.