55 வயதில் 2வது திருமணம்; மறுத்த மருமகள் - மாமனார் வெறிச்செயல்!

Attempted Murder Crime Tirunelveli
By Sumathi Apr 11, 2023 04:57 AM GMT
Report

2வது திருமணத்தை மருமகள் எதிர்த்ததால் மாமனார் அடித்து கொலை செய்துள்ளார்.

2வது திருமணம்

நெல்லை, இட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ்(55). இவரது மகன் தமிழரசன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். தமிழரசன் மனைவி முத்துமாரி(26) மாமனாருடன் வசித்து வருகிறார். தங்கராஜின் மனைவி இறந்துவிட்டார்.

55 வயதில் 2வது திருமணம்; மறுத்த மருமகள் - மாமனார் வெறிச்செயல்! | Father In Law Killed His Daughter In Law In Nellai

இதனால் 2வது திருமணம் செய்ய முடிவெடுத்த மாமனார், மருமகளை வீட்டை விட்டு வெளியேறுமாறு சண்டையிட்டுள்ளார். ஆனால் மருமகள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் வீட்டை விட்டு வெளியேறவும் மறுத்துள்ளார்.

அடித்து கொலை

இதனால் ஆத்திரமடைந்த தங்கராஜ், மருமகள் தலையில் இரும்பு கம்பியால் கொடுமையாக தாக்கிவிட்டு ஓடியுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி மருமகள் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது உறவினர்கள் முத்துமாரியின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். போலீஸார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மாமனாரை கைது செய்துள்ளனர்.