20 மனைவிகளுடன் வாழும் நபர்; அடேங்கப்பா.. குமுறும் இளைஞர்கள்!
16 மனைவிகளை ஒரே வீட்டில் வைத்து நபர் ஒருவர் குடும்பம் நடத்தி வருகிறார்.
20 மனைவிகள்
தான்சானியா நாட்டைச் சேர்ந்தவர் எம்சி எர்னஸ்டோ முயினுச்சி கபிங்கா. இவர் 1961ல் திருமணம் செய்துள்ளார். பின் ஒரு குழந்தை பிறந்துள்ளது. பின் தந்தையின் ஆசைக்கு ஏற்ப 5 திருமணங்கள் முடித்துள்ளார்.
அப்போது வரை தந்தைதான் குடும்ப வரவு செலவுகளை பார்த்து வந்துள்ளார். தொடர்ந்து தற்போது வரை 20 திருமணங்கள் முடித்துள்ளார். இதில் 4 மனைவிகள் இறந்து போன நிலையில், 16 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
தனி கிராமம்
இதன்மூலம், அவரது குடும்பத்தில் ஆண்களும், பெண்களுமாக 104 வாரிசுகள் இருக்கின்றனர். 144 பேரன், பேத்திகளும் உள்ளனர். இதுகுறித்து அவரது மனைவிகள் கூறுகையில், கபிங்காவின் நற்பெயர் காரணமாக அவரை மணம் முடிக்க சம்மதித்தோம். ஒவ்வொருவருக்கும் தனித்தனி வீடு உள்ளது.
தனித்தனியாக சமைத்தாலும் ஒரே வீட்டில் வாழ்கிறோம். ஒன்றாக சாப்பிடுகிறோம் என்கின்றனர். விவசாயம்தான் இவர்களது தொழிலாக உள்ளது.
ஒரு குடும்பமே தனி கிராமம்போல வாழ்ந்து வருகின்றனர். உலகின் பெரிய குடும்பங்களில் ஒன்றாக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. பழங்குடியினத்தில் கூடுதல் மனைவி கட்டிக் கொள்ள தடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.