டைம் டிராவல் முதல் ஏலியன் படையெடுப்பு வரை - புதிய கணிப்புகளால் பரபரப்பு
புதிய கணிப்புகள் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
எல்விஸ் தாம்சன்
எல்விஸ் தாம்சன் என்பவர் தன்னைத் தானே டைம் டிராவலர் என்று கூறிக்கொள்கிறார். மேலும், இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், எதிர்காலத்திற்கு பயணித்ததாகக் கூறும் தாம்சன்,
இந்தாண்டு 5 பெரிய சம்பவங்கள் நிகழும். ஏப்ரல் 6ஆம் தேதி, மணிக்கு 1,046 கிலோ மீட்டர் காற்றின் வேகத்தில் 24 கிலோ மீட்டர் அகலமுள்ள ஒரு சூறாவளி அமெரிக்காவின் ஓக்லஹோமாவை பேரழிவிற்கு உட்படுத்தும்.
புதிய கணிப்புகள்
மே 27 அன்று அமெரிக்காவில் இரண்டாவது உள்நாட்டுப் போர் வெடிக்கும். இதன் விளைவாக டெக்சாஸ் பிரிந்து அணு ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட உலகளாவிய மோதலைத் தூண்டி, இறுதியில் அமெரிக்காவை அழிவில் ஆழ்த்தும்.
செப்டம்பர் 1ஆம் தேதி, சாம்பியன் என்ற ஏலியன்கள் பூமிக்கு வரும் என்றும், 12,000 மனிதர்களை அவர்களின் பாதுகாப்புக்காக மற்றொரு மக்கள் வசிக்கும் கிரகத்திற்கு கொண்டு செல்வார்கள். செப்டம்பர் 19 அன்று அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை ஒரு பெரிய புயல் தாக்கும்.
இறுதியாக, நவம்பர் 3ம் தேதி, நீல திமிங்கலத்தை விட ஆறு மடங்கு பெரிய மற்றும் செரீன் கிரவுன் என்று பெயரிடப்பட்ட ஒரு பெரிய கடல் உயிரினம் பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ 26 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.