காலையில் காதலியுடன், மாலையில் வேறொரு பெண்ணுடன் திருமணம் - இடையில் கருக்கலைப்பு வேற..
இளைஞர் ஒருவர் காலையில் காதலியுடன், மாலையில் வீட்டில் பார்த்த பெண்ணுடன் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 பேருடன் திருமணம்
உத்தரப் பிரதேசம், கோரக்பூரை சேர்ந்த நபர் ஒருவர், நான்கு வருடங்களாக தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். காதலித்த காலத்தில் அந்த பெண் இரண்டு முறை கருக்கலைப்பு செய்துள்ளார்.
இருவருக்கும் ஏற்கனவே கோயிலில் ஒருமுறை திருமணம் நடந்துள்ளது. தொடர்ந்து, மீண்டும் கர்ப்பமடைந்ததால், பிரசவத்திற்காக அருகில் இருந்த ஒரு நர்சிங் ஹோமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தனது குழந்தையை மருத்துவமனையில் உள்ள ஒரு நர்ஸிடம் ஒப்படைத்துள்ளனர்.
சிக்கிய நபர்
இதற்கிடையில் அந்த ஆணின் குடும்பத்தினர் வேறொரு பெண்ணுடன் அவருக்கு திருமணத்தை ஏற்பாடு செய்துள்ளனர். இதையறிந்த பெண் கேட்டதில், நீதிமன்ற திருமணம் செய்து கொண்டால், தனது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வதாக கூறி அந்த நபர் பெண்ணை நம்பவைத்து திருமணம் செய்துள்ளார்.
ஆனால், அதே நாளில் இரவு அவரது குடும்பத்தினர் திட்டமிட்டபடி பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற திருமணத்தில், வேறொரு பெண்ணை மணந்து கொண்டார். தொடர்ந்து முதல் மனைவி அந்த நபரின் வீட்டிற்கு சென்றபோது, அவரது குடும்பத்தினர் தன்னை அவமதித்து வெளியேற்றியதாகக் கூறியுள்ளார்.
உடனே அந்த பெண் இதுகுறித்து போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஜிதேந்திர குமார் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.