கணவரை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து துவம்சம் செய்த மனைவி - படுவைரலாகும் வீடியோ காட்சி!

Relationship Crime Divorce Haryana
By Sumathi Mar 26, 2025 11:44 AM GMT
Report

 வரதட்சணை கேட்ட கணவனை போலீஸ் நிலையத்திற்குள் குத்துச்சண்டை வீராங்கனை அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 வரதட்சணை கொடுமை

ஹரியானாவைச் சேர்ந்தவர் தீபக் நிவாஸ் ஹோடா. கபடி வீராரான இவர் இந்திய அணிக்காக விளையாடித் தங்கப்பதக்கம் உட்படப் பல்வேறு பதக்கங்களைப் பெற்று தந்துள்ளார்.

haryana

அதே மாநிலத்தைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை சவீட்டி போரா என்பவரை 2022ல் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து கணவன் வீட்டார் தன்னை வரதட்சணை கேட்டுச் சித்ரவதை செய்து அடித்து உதைப்பதாக போலீஸில் புகாரளித்திருந்தார். அதன் அடிப்படையில் தீபக் ஹோடா மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தகாத உறவில் மோகம்; கணவரை கொன்று சாலையில் வீசிய மனைவி - பகீர் பின்னணி!

தகாத உறவில் மோகம்; கணவரை கொன்று சாலையில் வீசிய மனைவி - பகீர் பின்னணி!

மனைவி செய்த செயல்

மேலும், இது குறித்து விசாரிக்க போலீஸ் நிலையத்திற்கு வரும்படி சம்மன் அனுப்பப்பட்டது. சவீட்டி விவாகரத்து கோரியும் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து சவீட்டி, தீபக் ஹோடா மற்றும் இருவரது உறவினர்கள் ஹிசார் போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்தனர்.

கணவரை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து துவம்சம் செய்த மனைவி - படுவைரலாகும் வீடியோ காட்சி! | Boxer Wife Beats Up Husband Inside Police Station

அவர்கள் அங்கு ஒரு அறையில் உட்கார வைக்கப்பட்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அது ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறி, சவீட்டி தனது கணவனை நோக்கிப் பாய்ந்து அவரை அடித்தார்.

அவரது கழுத்தைப் பிடித்துக்கொண்டு கடுமையான வார்த்தைகளால் திட்டியபடி அடித்து உதைத்தார். பிறகு போலீசார் ஸ்வீட்டியை சமாதானப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.