லெஸ்பியன் மனைவியின் காதலியை 2வது திருமணம் செய்துக்கொண்ட கணவன் - ஷாக் சம்பவம்!

United States of America Marriage
By Sumathi May 18, 2023 04:14 AM GMT
Report

தன்பாலின ஈர்ப்பாளராக மாறிய மனைவியை கணவர் காதலியோடு ஏற்றுக்கொண்டுள்ளார்.

 மனைவியின் காதலி

அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியர் சன்னி. ஸ்பீட்டி சிங் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தன்னுடைய பழைய காதல் கதையை கணவரிடம் மனைவி பகிர்ந்துள்ளார்.

லெஸ்பியன் மனைவியின் காதலியை 2வது திருமணம் செய்துக்கொண்ட கணவன் - ஷாக் சம்பவம்! | Man Married With Lesbian Wifes Lover Girl America

தனக்கு 18 வயது இருக்கும்போது மற்றொரு பெண்ணுடன் லெஸ்பியன் தொடர்பில் இருந்ததாக தெரிவித்துள்ளார். மறுபுறம், கலிஃபோர்னியாவில் வாழ்ந்து வந்த பித்து கௌர் என்ற பெண் இந்தியர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணம் நடந்த சில மாதங்களிலேயே விவாகரத்து பெற்றுள்ளனர்.

ஏற்றுக்கொண்ட கணவன்

இதனால் அவர் தனியே பிரிந்து இண்டியானாவில் குடிபெயர்ந்துள்ளார். அங்குதான் தம்பதியான ஸ்பீட்டி சிங் - சன்னியை சந்தித்துள்ளார். தனியாக இருந்த பெண்ணை ஒரு வாரம் தங்கியிருக்க வீட்டிற்கு அழைத்துள்ளனர். அப்போது, தியர் அவர்களது வீட்டுக்கு இந்தப் பெண்ணை ஒரு வாரம் தங்கியிருக்க அழைத்தனர்.

லெஸ்பியன் மனைவியின் காதலியை 2வது திருமணம் செய்துக்கொண்ட கணவன் - ஷாக் சம்பவம்! | Man Married With Lesbian Wifes Lover Girl America

இந்த சமயத்தில் ஸ்பீட்டி சிங்குடன் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பித்து கௌருக்கு நெருக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த சன்னி பித்து கௌரை இரண்டாவது மனைவியாக ஏற்றுக் கொண்டார். இந்த உறவின் மூலம் மேலும் இரண்டு குழந்தைகள் பிறந்தன.

மூவரும் ஒரே வீட்டில் இணைந்து வாழும் நிலையில், இயல்பாக தங்களுக்குள் எழக் கூடிய பொறாமை உணர்வுகள் மற்றும் பாதுகாப்பின்மை எண்ணங்கள் என பல சவால்களை கடந்து இந்த முத்தரப்பு பந்தம் உறுதியாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளனர்.