நூற்றுக்கும் மேற்பட்ட தன்பாலின திருமணம் : மெக்ஸிகோவில் நடந்த பிரமாண்ட பேரணி

By Irumporai Jun 26, 2022 06:03 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

LGBT சமூகம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தை பெருமையாக‌ கொண்டாடுகிறது. இது LGBTQAI+ சமூகம் எதிர்கொள்ளும் போராட்டங்கள் மற்றும் பாகுபாடுகளை அங்கீகரிப்பதற்காகவும் பார்க்கப்படுகிறது.

LGBT திருமணம்

அந்த வகையில் ஒவ்வொரு ஜூன் மாதமும் நடத்தப்படும் வருடாந்திர LGBT கொண்டாட்டங்களாக மாறியது, அந்த வகையில்மெக்ஸிகோவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பலர் கூட்டாக திருமணம் செய்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட தன்பாலின  திருமணம் : மெக்ஸிகோவில் நடந்த பிரமாண்ட பேரணி | Hundreds Lgbt Married Annual Mass Ceremony

கடந்த 2020 முதல் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கொரோனா பரவல் காரணமாக நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில், கொரோனா தாக்கம் குறைந்ததையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரணியின்போது நூற்றுக்கும் மேற்பட்ட தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்துகொண்டனர்.

100 பேர் திருமணம்

அன்றைய தினம் ஒரே மாதிரியான உடையணிந்த தன் பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்துகொண்டு முத்தங்களைப் பரிமாறிக்கொண்டனர். அப்போது மெண்டல்சனின் ’வெட்டிங் மார்ச்’ உள்ளிட்ட பாடல்கள் இசைக்கப்பட்டது.

வானவில் நிறத்திலான கேக் வெட்டி திருமணத்தைக் கொண்டாடினர். மெக்ஸிகோ நாட்டின் தலைநகரான மெக்ஸிகோ நகரம் கடந்த 2010ம் ஆண்டு தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது.

அந்நாட்டில் உள்ள 32ல் 26 மாநிலங்கள் இதை அங்கீகரித்திருக்கின்றன. தன்பாலின திருமணத்தையொட்டி நேற்று பேரணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

கருக்கலைப்பு சட்டம் விவகாரம்;அமெரிக்காவுக்கு மோசமான நாள் - ஜோ பைடன்..!