7 வருஷ காதல்; எதிர்த்த பெற்றோர், கர்ப்பமான காதலி - சாதி மறுப்பு திருமணம்!

Marriage Pudukkottai
By Sumathi Sep 27, 2023 04:33 AM GMT
Report

9 மாத கர்ப்பிணி காதலியை, எதிர்ப்பை மீறி காதலன் கரம் பிடித்துள்ளார்.

காதலி கர்ப்பம்

புதுக்கோட்டை, திருமயம் அருகே உள்ள பெருங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆஷா(21). இவர் பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன்(24) என்பவரை காதலித்து வந்தார்.

7 வருஷ காதல்; எதிர்த்த பெற்றோர், கர்ப்பமான காதலி - சாதி மறுப்பு திருமணம்! | Man Married 9 Month Pregnant Girlfriend Pudukottai

தொடர்ந்து, தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து விட்டு சென்னையில் மகளிர் விடுதியில் தங்கி மொபைல் ஷோரூமில் ஆஷா வேலை பார்த்து வந்துள்ளார்.

சாதி மறுப்பு திருமணம்

அதேநேரம் சேலத்தில் வேலை பார்த்து வந்த ஐயப்பன் அவ்வப்போது வந்து காதலியை சந்தித்து சென்றுள்ளார். அதில், கர்ப்பமான ஆஷா திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

கர்ப்பமாகி 7 மாதம் தான்.. ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகள் - தவிக்கும் பெற்றோர்!

கர்ப்பமாகி 7 மாதம் தான்.. ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகள் - தவிக்கும் பெற்றோர்!

இதனால் காதலை வீட்டில் தெரிவித்ததில் ஆஷா பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை.

இந்நிலையில், ஆஷா போலீஸில் புகாரளித்தார். அதனைத் தொடர்ந்து, ஐயப்பன் தனது பெற்றோரை மீறி ஒன்பது மாத கர்ப்பிணியான தனது காதலியை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.