மனைவி கொடூர கொலை; cool -ஆக தாய்க்கு வீடியோ கால் பேசிய நபர் - அதிர்ச்சி சம்பவம்!
மனைவியை கொலை செய்த நபர் தனது தாயிடம் வீடியோ காலில் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ கால்
பஞ்சாபைச் சேர்ந்த ஜக்பிரீத் சிங் மற்றும் பல்வீந்தர் கவுர் தம்பதிக்கு கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பல்வீந்தர் கவுர் தனது மகளின் படிப்பிற்காக கனடாவில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஜக்பிரீத் சிங் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மனைவி மற்றும் மகளை பார்க்க அவர் கனடா சென்றுள்ளார். சில நாட்களுக்கு பின் அவர் பஞ்சாபில் உள்ள லூதியானாவில் இருக்கும் தனது தாயிடம் வீடியோ கால் மூலம் பேசியுள்ளார்.
அப்போது அவர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார்.
கொடூர கொலை
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிய நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பல்வீந்தர் கவுரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக ஜக்பிரீத் சிங்கை கனடா போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து அவரது உறவினர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் மகிழ்ச்சியான தம்பதியாக இருந்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த கொலைக்கான காரணத்தை கண்டறிய போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.