தாய்க்கு பேய் விரட்டுவதாக கூறி மகளை கர்ப்பமாக்கிய மந்திரவாதி - அதிர்ச்சி சம்பவம்
8ஆம் வகுப்பு மாணவியை மந்திரவாதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
நாகர்கோவில், வடசேரி மேலகலுங்கடி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவர் மாந்தீரிகம், பரிகார பூஜைகளையும் செய்து வந்திருக்கிறார். இவரிடம் நாகர்கோவில் பள்ளிவிளையில் வசிக்கும் தொழிலாளி(55) ஒருவர், தன் மனைவியை அழைத்து வந்து அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போவதாக கூறியுள்ளார்.
அப்போது மணிகண்டன், உங்கள் மனைவிக்கு பேய் பிடித்திருக்கிறது. நான் சரி செய்து தருகிறேன் என தெரிவித்துள்ளார். இது தொடர்பான பூஜைகளுக்காக அந்த தொழிலாளியின் வீட்டுக்கு அடிக்கடி மணிகண்டன் சென்று வந்துள்ளார்.
சிறுமி கர்ப்பம்
அந்த தொழிலாளிக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள்(13) 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். திடீரென சிறுமிக்கு வயிறு வலிப்பதாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்ததில் அவர் 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்ததில், ``மந்திரவாதி மணிகண்டன் அடிக்கடி எனக்கு பிஸ்கட், சாக்லெட் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்து தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். உன்னுடைய அம்மாவுக்கு குணமாக வேண்டுமென்றால் நான் சொல்கிறபடி கேட்க வேண்டும்.
வேறு யாரிடமும் இது பற்றி எதுவும் கூற கூடாது'' என மிரட்டியதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து புகாரின் அடிப்படையில், போலீஸார் மந்திரவாதியின் மீது போக்சோவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.