யாருப்பா நீ? பஸ்சுக்குள் தொட்டில் கட்டி தூங்கிய இளைஞர் - ஆத்திரத்தில் டிரைவர் செய்த செயல்!
பஸ்சுக்குள் இளைஞர் ஒருவர் தொட்டில் கட்டி தூங்கிய வீடியோ வைரலாகி உள்ளது.
பஸ்சுக்குள் தொட்டில்
ரெயில்களுக்குள் குழந்தைகளுக்காக தொட்டில் கட்டுவது வழக்கமாக நடக்கும் ஆனால் சமீபகாலமாக ரெயில்களில் ஏற்படும் கடும் கூட்ட நெரிசலில் இருக்கை கிடைக்காத சில பெரியவர்கள் கூட போர்வையால் தொட்டில் கட்டி படுத்துகொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பேசுப்பொருளாகியது.
இந்த நிலையில், ஓடும் பஸ்சுக்குள் இளைஞர் ஒருவர் தொட்டில் கட்டி படுத்து உறங்கிய காட்சிகளும், அதனை அகற்றுமாறு கூறிய டிரைவருடன் அந்த பயணி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கட்சிகளும் கொண்ட வீடியோ ஒன்று தற்போது எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
இளைஞர்
எக்ஸ் தளத்தில் ஷாம்பெயின் ஸ்லோஷி என்ற பயனர் 57 வினாடிகள் உள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பஸ் இருக்கைகளுக்கு நடுவே குறுக்காக பெரிய கயிறுகள் மூலம் தொட்டில் கட்டிய இளைஞர் ஒருவர் அதற்குள் படுத்துக்கொள்கிறார்.
இதனை பார்த்து டிரைவரும், கண்டக்டரும் அந்த பயணியிடம் தொட்டிலை அகற்றுமாறு கூறிய போது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதன் காரணமாக அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது .
வாக்குவாதம் முற்றியத்தில் ஆத்திரம் அடைந்த டிரைவர், நான் பஸ் ஓட்ட மாட்டேன் என கூறும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர் இளைஞரின் இந்த செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.