பேருந்தில் கட்டைப்பையில் வந்த குழந்தையின் அழுகுரல் - பதறிப்போன பேருந்து நடத்துனர்
பேருந்து ஒன்றில் கட்டைப்பையில் குழந்தையின் அழுகுரல் கேட்கவே பதறிப்போன நடத்துனர் குழந்தையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
கட்டைப்பையில் குழந்தை
வத்தலக்குண்டு பகுதியில் இருந்து செம்பட்டிக்கு பேருந்து ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்பேருந்தில் பெண் ஒருவர் செம்பட்டி பேருந்து நிலையம் வந்த உடன் பெண் இறங்கி திடீரென விறு, விறுவென நடந்துள்ளார்.
பின்னர் பேருந்தில் அவர் கையில் வைத்திருந்த கட்டைப்பையில் பெண் குழுந்தையை வைத்துவிட்டு ஓடியுள்ளார்.
பேருந்தில் கட்டைப்பையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்கவே அவர் அருகில் அமர்ந்து பயணம் செய்த வேலுமணி என்பவர் பையை திறந்து பார்த்துள்ளார்.
அப்போது கட்டைப்பையில் பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
வேலுமணி இது குறித்து நடத்துனரிடம் தெரிவிக்கவே நடத்துநர் குழந்தையை செம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
போலீசாரும், சமூக நலத்துறையினரும் சேர்ந்து குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்தனர்.
இதையடுத்து பேருந்தில் குழந்தையை விட்டுச்சென்ற பெண் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.