காதல் மாளிகையில் ராஜ வாழ்க்கை - 6 மனைவிகளுடன் குதூகலமாக வாழும் நபர்!
மாளிகையில் 6 மனைவிகளுடன் நபர் ஒருவர் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.
காதல் மாளிகை
திருமணம் என்றால் ஒரு புது வாழ்க்கையின் தொடக்கமாகும். அதில் குடும்பம், கடமைகள் என பல்வேறு பொறுப்புகளும் நம்மிடம் வந்து விடுகிறது. அதற்காகவே திருமணம் என்றாலே ஒரு சிலர் அஞ்சுவது உண்டு. ஆனால்,பிரேசில் நாட்டில் வசிக்கும் ஆர்தர் ஓ உர்சோ என்ற நபர் 6 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
இவர் இதுவரை 9 முறை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்களில் 4 பேரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது மேலும் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். தற்போது மீதமுள்ள தனது 6 மனைவிகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். பிரேசில் நாட்டில் சட்டப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்துகொள்ள அங்கீகரப்படவில்லை.
இருப்பினும் ஆர்தர் ஆறு மனைவிகளுடன் வாழ்ந்து வருவது பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரித்தையும் அளிக்கிறது. ஆர்தர் தனது மனைவிகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதை வீடியோ பதிவுகளாகவும் புகைப்படங்களாகவும் இணையத்தளத்தில் பதிவிட்டுவருகிறார்.
6 மனைவிகள்
அதுமட்டுமல்லாமல் 3 மனைவிகள் விவாகரத்து பெற்றது போல், மற்ற மனைவிகளும் செய்து விடக்கூடாது என்று அவர்களுக்கு பல வசதிகளையும் செய்து கொடுத்து மிகவும் சொகுசான, மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்து கொடுத்துள்ளார் ஆர்தர். இவர்கள் ஒன்றாக வாழும் வீட்டிற்கு அவர் காதல் மாளிகை என்று பெயரிட்டுள்ளார்.
சுமார் 800 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த மாளிகையில், ஒப்பனை அரை, ஸ்விம்மிங் ரூம், விஷ் லேக், கேம் ரூம், என பல பிரம்மாண்ட வசதிகளுடன் கட்டமைத்துள்ளார். அதிலும் குறிப்பாக தனது 6 மனைவிகளுடன் தாராளமாக படுக்க மிக பெரிய காட்டில் ஒன்றை அமைத்துள்ளார்.
6 ஆடி நீளமும் 6 அங்குலமும் உள்ள இந்த கட்டிலில் அரை கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவர் ஒரு மனைவியை மட்டுமல்லாமல் 6 மனைவிகளையும் சமமாக நேசிக்கிறாராம். தனது ஆறு மனைவிகளுக்காகவும் எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஆறு மனைவிகள் ஒன்றாக இருக்கும் இந்த காதல் மாளிகையில் தினம் தினம் சண்டை வரும் என எல்லோரும் நினைப்பார்கள் ஆனால் 6 மனைவிகளுடன் மிகவும் வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் ஆர்தர் வாழ்ந்து வருகிறார்.