பாலியல் வன்கொடுமை செய்துவிடுவேன் - கார் கண்ணாடியை உடைத்து...பெண்ணை மிரட்டிய நபர்!
நபர் ஒருவர் கார் கண்ணாடியை உடைத்து பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
பாலியல் வன்கொடுமை
பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் கத்ரிகுப்பே சாலையில் காரில் அப்பெண்ணும், தாயாரும் சென்றுக் கொண்டிருந்த போது ஒரு ஆட்டோ திடீரென இடமிருந்து வலமாகச் சென்றதால் மற்ற வாகனங்கள் மீது மோதாமல் தவிர்க்கப்பட்டது.
ஆட்டோ குறுக்கே வந்தது குறித்து கேட்ட போது, ஆட்டோ ஓட்டுநர் அமைதியாக இருக்க ஆனால் ஆட்டோவில் அமர்ந்திருந்த 20 வயதுடைய நபர் ஆபாசமாக திட்ட தொடங்கியுள்ளார். அதுமட்டுமின்றி, அப்பெண்ணை கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை செய்துவிடுவேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
மிரட்டிய நபர்
அதனை அருகில் இருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அந்த நபர் பெண்ணின் கார் கண்ணாடியை உடைத்து, கதவை வலுக்கட்டாயமாக திறக்க முயன்றுள்ளார். இந்த சம்பவத்தப்போதே, அப்பெண் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார்.
@BlrCityPolice @blrcitytraffic while you think your city’s safe, here’s what’s happening in broad daylight. The auto this guy was in turned right without any indication, and around 3 people almost crashed into him. I honked once. For 10 seconds. pic.twitter.com/slH2Q1Eqx1
— Satan (@satanicthots) September 12, 2024
அதனால் வீடியோ வெளிவந்தால் பெண்ணையும், முழு குடும்பத்தையும் பாலியல் வன்கொடுமை செய்த பிறகு கொலை செய்து விடுவதாக அந்த வாலிபர் மிரட்டியுள்ளார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை அப்பெண் பதிவிட்டது சமூக ஊடகங்களில் தீயாய் பரவி வருகிறது.
இதனை அறிந்த போலீசார் ஆட்டோ டிரைவரை கவனக்குறைவாக ஓட்டி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதற்காக கைது செய்தனர். ஆனால் மிரட்டல் விடுத்த நபரை இதுவரை கைது செய்யவில்லை.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பயனர்கள் பலரின் சமூக கவலையையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.