சாலையில் மன்னிப்பு கேட்ட கல்லூரி மாணவி - விரட்டிச்சென்று முத்தம் கொடுத்த இளைஞர்!
மன்னிப்பு கேட்ட மாணவியை விரட்டிச்சென்று இளைஞர் முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன்னிப்பு கேட்ட மாணவி
கோவையைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி, பாலக்காடு சாலையில் குனியமுத்தூர் அருகே சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அந்த சாலை மேடு பள்ளமாக இருந்ததால்
முன்னால் சென்ற ஒரு இளைஞரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார். உடனே அந்த மாணவி இளைஞரிடம் மன்னித்துவிடுங்கள் எனக் கூறி புன்னகைத்துள்ளார்.
இளைஞர் செயல்
இதனையடுத்து அந்த இளைஞர் மாணவியை பின் தொடர்ந்து சென்று, மாணவி சென்ற ஸ்கூட்டரை வழிமறித்து நிறுத்தியுள்ளார். பின், அந்த இளைஞர் தனது வாகனத்தைவிட்டு இறங்கி சென்று மாணவியிடம் பேச்சுக்கொடுத்துள்ளார்.
திடீரென மாணவியின் கையை பிடித்துக்கொண்டு, அவரின் கை மற்றும் கழுத்தில் முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில், மாணவி சாலையில் கத்தி கூச்சலிட்டதில் பொதுமக்கள் ஓடி வருவதற்குள் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாணவி காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீஸார் முகமது ஷெரிப் என்ற இளைஞரை கைது செய்துள்ளனர்.