குத்துச்சண்டை வீரர் ஓட ஓட வெட்டி கொலை - பயங்கரத்தால் பீதியில் மக்கள்!
குத்துச்சண்டை வீரர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குத்துச்சண்டை வீரர் கொலை
சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ்(24). இவர் பல்வேறு குத்துச் சண்டை போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம் பெற்றுள்ளார்.
காவல்துறை தேர்வுக்கும் தொடர்ந்து தயாராகி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும், அவர் பகுதியில் வசித்து வந்த இளைஞர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
நள்ளிரவில் பயங்கரம்
இந்நிலையில் தனுஷ் நள்ளிரவு வீட்டின் அருகே சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று தனுஷை ஓட ஓட வெட்டி படுகொலை செய்து தப்பிச் சென்றது. இந்த சம்பவத்தில் உடல் மற்றும் தலை முழுவதும் சிதைக்கப்பட்ட நிலையில் தனுஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தனை தடுக்க முயன்ற தனுஷின் நண்பருக்கு கழுத்தில் வெட்டு விழுந்துள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில் உடனே சம்பவம் குறித்து விரைந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் மோகன், செந்தில், டேவிட், விஷால் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

Brain Teaser Maths: '10+5=இற்கு விடை 35' எனில் வினாக்குறி இருக்குமிடத்தில் என்ன விடை வரும்? Manithan
